கரையைக் கடந்தது டானா புயல்.. கொட்டிய மழை.. 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று!
டானா புயல், ஹபாலிகாத்தி மற்றும் டமாரா அருகே வடக்கு ஒடிசாவில் 12 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது.
ஒடிசா : வங்கக்கடலில் உருவான அந்த டானா புயல் நேற்றிரவு தீவிர புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து, வடக்கு, வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் அந்த புயல் ஒடிசாவின் புரி, மேற்குவங்கத்தின் சாகர் தீவுக்கு இடைப்பட்ட பகுதியில் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது.
அதன்படி, வங்கக்கடலில் 6 மணி நேரமாக 12 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், வடக்கு ஒடிசாவின் பிதார்கனிகா மற்றும் தமாரா இடையே இரவு 1.30 மணி முதல் 3.30 மணி வரை கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது, அதிகாலையில் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒடிசாவின் மயூர்பஞ்ச், கட்டாக், ஜாஜ்பூர், பாலசோர், பத்ரக், கேந்திரபாரா மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்துள்ளது. இதனிடையே, டானா புயல் காரணமாக பிடர்கனிகா தேசிய பூங்காவிற்கும் தாம்ரா துறைமுகத்திற்கும் இடையில் நிலச்சரிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு மற்றும் புயலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்தடுத்த வெளியாகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஒடிசா மாவட்டங்களான மஹாகல்பாதா மற்றும் கேந்திரபாரா போன்ற பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். மேலும், மிக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் 1.14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.