பெங்களூர் கட்டிட விபத்து : உயிரிழந்த இருவருக்கு நிதியுதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.
பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக பெங்களுருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் கட்டப்பட்டு வந்த 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கிய 20பேர் காயத்துடன் மீட்கப்பட்டாலும், இருப்பினும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தமிழகத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்யராஜ் என இருவர் பரிதாபமாக உயிரிழிந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த விபத்து காரணமாக கட்டிட உரிமையாளர் மோகன் மற்றும் ஒப்பந்தக்காரர் முனியப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக இந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.2லட்சமும், காயம் கண்டவருக்கு ரூ.50,000 தொகையும் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், கட்டிட விபத்தில் உயிரிழந்த தமிழர்களான மணிகண்டன் மற்றும் சத்யராஜு ஆகியோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹென்னூரில் பெய்த கனமழையின் காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | pic.twitter.com/JOm7rfbo3S
— TN DIPR (@TNDIPRNEWS) October 24, 2024