குடையுடன் சுற்றி வரும் புஸ்ஸி ஆனந்த்.! தவெக மாநாட்டின் ‘IN-OUT’ அப்டேட்…
தவெக மாநாட்டில் பார்க்கிங், உள்ளே , வெளியே செல்லும் வழிகள் ஆகியவை காவல்துறை அறிவுறுத்தலின் பெயரில் முறையாக செய்து வருகிறோம் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக், ‘தமிழக வெற்றிக் கழக மாநாடு’ பற்றிய செய்தி தான். அந்த மாநாட்டில் யார் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள், யாரெல்லாம் கட்சியில் இணைய உள்ளனர்.? கட்சியின் கொள்கைகள் என்ன.? என பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்கான விடைகளும் அவ்வப்போது தகவல்களாக வெளியாகி கொண்டே இருக்கிறது.
அதேபோல மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்தும், எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள்.? பாதுகாப்பு வசதிகள் என்ன என்பது குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாநாட்டு பணிகளில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
மாநாட்டிற்கு வருபவர்கள் எந்த வழியில் வருவார்கள்.? பார்க்கிங் எப்படி இருக்கும் என்ற பல்வேறு கேள்விகளுக்கு புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், எல்லா பார்க்கிங் வசதிகளும் காவல்துறையினர் வழிகாட்டுதல்களின் பெயரில் அவர்கள் கூறியது போலவே தனித்தனியாக ஏற்பாடு செய்துள்ளோம். பார்க்கிங் வசதிகளை அந்தந்த மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள் தலைமையேற்று முறைப்படுத்த உள்ளனர்.
அதே போல மாநாடு நடைபெறும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ளதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை பகுதியில் இருந்து வருபவர்கள் ஒரு புறம் வழியாகவும் மற்றவர்களுக்கு வேறு பகுதி வழியாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்தும் காவல்துறை கூறியது போலவே முன்னேற்பாடுகளை செய்துள்ளோம்.” என்றும்,
மாநாட்டில் பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரம் ரசிகர்கள் ஈடுபட உள்ளனர் என்றும், 150 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு மாநாட்டில் தயார் நிலையில் இருப்பார்கள் என்றும் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று மாநாடு பணிகளை பார்வையிட வந்த புஸ்ஸி ஆனந்த் அங்கு சிறிய அளவில் மழை பெய்து வருவதால் குடையுடன் மாநாட்டு பணிகளை பார்வையிட்டார்.