“நோய்களை உண்டாக்கும் அரசு மருத்துவமனை” இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம்..!!

Default Image

தூத்துக்குடி ,

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்தாலும் பராமரிப்பு நிர்வாகபணியானது நோயாளிகள் மற்றும் பலரை விமர்சனம் செய்யவைத்துள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் சிகிசைப்பெற்று வருவது உட்பட ஆயிரக்கணக்கன நோயாளிகள் என தினமும் சிகிசைக்கு வந்து செல்கிற்றனர்.இந்நிலையில் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவமனை நிர்வாகத்தின் ஒப்புதலுடன் ஒரு உணவகம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.அரசு மருத்துவமனையின் பின்புற வளாகத்தில் பிணவறை அருகே தொடங்கப்பட்ட இந்த உணவுக் கூட்டத்தை நோயாளிகள் உட்பட பலரும் பிணவறையை கருத்தில் கொண்டு  இடம் மாற்றி அமைக்க மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் இந்த உணவகத்தை இடமாற்றம் செய்வதை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை.இதனால்நோயாளிகள் , பொதுமக்கள் உட்பட ஏராளமானோரின் கண்டனத்துக்குள்ளாகியுள்ள மருத்துவமனை நிர்வாகம் இந்த கோரிக்கையை ஏற்பதாக இல்லை.இந்நிலையில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி மாநகரகுழு மருத்துவமனை நிர்வாகத்தின் அவலத்தை கண்டித்துள்ளது.

இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி மாநகர தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் விடுத்த செய்தி குறிப்பில் ,

தூத்துக்குடி மாநகராட்சியி ல் இருக்கும் மருத்துவமனை எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு கட்டமைப்பு வசதி இல்லாமல் மருத்துவமனை உள்ளது.குறிப்பாக நோயை போக்க அனைவரும் மருத்துவமனை வருவார்கள் ஆனால் இங்கே நோயை வாங்கிக் கொள்ள மருத்துவமனை வருவதாக மருத்துவமனை நோயாளிகள் , பொது மக்கள் அசப்படுகின்றனர்.அதுமட்டுமில்லாமல் இங்கே அமைக்கப்பட்டுள்ள உணவகம் இறந்த பிணத்தை வைக்கும் அறை வைக்கும் இடத்தின் அருகே அமைத்துள்ளது.இதனால் அங்கே விற்பனை செய்யும் அணைத்து உணவு , மருத்துவ பொருட்களில் நோய்  தோற்றும் அபாயம் இருக்கிறது.இது நோயாளிகளுக்கும் , பொது மக்களுக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.இதனால் சிகிச்சை பெரும் நோயாளிகள் , மற்றும் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் இருக்கிறது என்றார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.

தொடர்ந்து பேசிய அவர் மருத்துவமனை நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் உடனே சரி செய்யவில்லை என்றால் ஆயிரக்கணக்கான வாலிபர்களை திரட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்க நடத்தும் என எச்சரிக்கை செய்தார்.இதில் மாநகர செயலாளர் கண்ணன் , மாநகர நிர்வாகிகள்  காஸ்ட்ரோ , அருண் ,ராம்குமார்,ஸ்மார்ட் சேகர் , கார்த்திக், நாகராஜ் , பாலா ,ஜேம்ஸ் , பாலசுப்பிரமணியன் ,முத்துராஜா , ஆவுடையப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்