59 பேரைப் பலிவாங்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ISIS உரிமை கோருகிறது…!
அமெரிக்காவில், லாஸ் வேகாஸ் நகரில், 59 பேரைப் பலிவாங்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ISIS உரிமை கோரியிருக்கிறது. கொலையாளி வெள்ளையின கிறிஸ்தவராக இருந்த போதிலும், “அவர் ஏற்கனவே இரகசியமாக இஸ்லாமியராக மதம் மாறி இருந்தாராம்!”
இது வழமையான உரிமை கோரல்கள் வெளியாகும் ஐ.எஸ். இணையத் தளத்தில் வந்திருந்தது.போலீஸ் தனது விசாரணையில், இந்த ஐ.எஸ். உரிமை கோரலை கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே ஊடகங்களில் வரும் செய்தியை பார்த்து விட்டு, தாமே செய்ததாக ஐ.எஸ். உரிமை கோருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது