தெறிக்கும் ஆக்சன்…கலங்க வைக்கும் எமோஷனல்! வெளியானது அமரன் டிரைலர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் டிரைலர் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்று வருகிறது.

Amaran - Trailer

சென்னை : சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி விருந்தாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான அதிரடி ஆக்சன் மற்றும் காதல் காட்சிகள் கொண்ட அசத்தலான டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரைலரை வைத்துப் பார்க்கையில், படம் சிவகார்த்திகேயனுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமைந்து அவருடைய கேரியரில் முக்கியமான படமாகவும் இருக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே, படம் உருவாவதற்கு முன்பே இந்த படம் ஷோபியான் காசிபத்ரி ஆபரேஷன் நடவடிக்கையின் போது வீரமரணம் அடைந்த ஏசி விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்று கூறப்பட்டது.

எனவே, இப்படி ஒருவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தைப் பிசிறு தட்டாமல் எடுக்கவேண்டும் என்பது பெரிய ஒரு விஷயம். பொறுப்பாக ஒவ்வொரு விஷயத்தையும் சிறப்பாகக் கையாண்டு படத்தினை எடுக்கவேண்டும். இந்த பொறுப்புணர்வைப் புரிந்துகொண்ட படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சிறப்பாக இயக்கி இருப்பது டிரைலரை வைத்துப் பார்க்கும்போது நமக்குத் தெரிகிறது.

ட்ரைலரில் ஆக்சன் காட்சிகள் மற்றும் பேசும் வசனங்கள் என அனைத்திலும் சிவகார்த்திகேயன் இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலாக நடித்து இருக்கிறார். அத்துடன், ட்ரைலரில் வரும் காதல் காட்சிகளும் நம்மளை சீதாராமன் படத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கிறது. அதைப்போல எமோஷனல் காட்சிகளும் நம்மளை கலங்க வைக்கிறது.

எனவே, டிரைலரை பார்த்த பலரும் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் பிளாக் பஸ்டர் தான் என விமர்சனங்களைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். இருப்பினும், டிரைலர் அருமையாக இருந்தாலும் படம் எப்படி இருக்கப்போகிறது? படத்தில் குறைகள் எதுவும் இருக்கிறதா? என்பதைப் படம் பார்த்தால் தான் தெரியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar
goods trains collide in Jharkhand
TNPSC Group 1 Mains Exam
aadhav arjuna - Charles jose martin