IND vs NZ : ராகுல் தொடருவாரா? பத்திரிகையாளர் கேள்விக்கு காட்டமாக பதிலளித்த கம்பீர்!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியானது நாளை புனேவில் நடைபெற உள்ளது.

Gautam Gambhir

புனே : இந்தியா-நியூஸிலாந்து அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

இதனால், இதற்கு அடுத்து நடைபெற இருக்கும் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில், நாளை போட்டி புனேவில் தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் புனேவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறார்.

அங்கு இந்திய அணியின் பிளையிங் லெவன் குறித்தும் கே.எல்.ராகுல் குறித்த கேள்வியும் கேட்கப்பட்ட போது, கம்பீர் காட்டமாகப் பதிலளித்துள்ளார். அதில், பேசிய அவர், “எங்களுடைய பிளேயிங் லெவனை சமூக ஊடகங்கள் முடிவு செய்ய முடியாது. சமூக ஊடகங்கள் அல்லது நிபுணர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியம் கிடையாது.

கேஎல்.ராகுல் கடினமான கான்பூர் ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பெரிய ரன் அடிக்க விரும்புகிறார். நாங்கள் அவருக்குத் தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம்”, எனக் கம்பீர் பேசியிருக்கிறார். இதன் மூலம் நாளை நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடுவதைக் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்