“அமெரிக்கா முதல் பெண் அதிபரை வரவேற்க தயாராக உள்ளது”…கமலா ஹாரிஸ் பேச்சு!

டோனால்ட் டிரம்ப் பேச்சால் இப்போது மக்கள் மிகவும் சோர்வடைந்து இருப்பார்கள் என தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கமலா ஹாரிஸ் விமர்சித்து பேசியுள்ளார்.

trump angry kamala harris

அமெரிக்கா : வருகின்ற நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டோனால்ட் டிரம்ப் இருவரும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் காரணத்தால் அமெரிக்க மக்களுக்கு மத்தியில் ” யார் தேர்தலில் வெற்றிபெறப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த சூழலில் அரசியல் பிரச்சாரத்தில் மும்மரமாக இருக்கும் இருவரும் மாறி மாறி பிரச்சாரங்களில் விமர்சனம் செய்தும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக, சமீபத்தில் கூட டோனால்ட் டிரம்ப்   “ஷிட் துணைத் தலைவர்” என கமலா ஹாரிஸ் பதவியை இழுவுபடுத்தியது போல பேசியிருந்தார். அதற்கு, தன்னுடைய பாணியில் கமலா ஹாரிஷூம் தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்து  இருந்தார்.

Read More- பதிவியை இழிவுப் படுத்தி டிரம்ப் பேச்சு? பதிலடி கொடுத்த கமலா ஹாரிஸ் ..!

கமலா ஹாரிஸ் உறுதி

இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்துகொண்ட போது கமலா ஹாரிஸ் இந்தத் தேர்தலில் வெற்றி பெற இருக்கும் உறுதியுடன், “அமெரிக்க மக்கள் இந்த முறை பெண் அதிபரைத் தேர்ந்தெடுக்க தயாராக உள்ளார்கள்” என பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “டோனால்ட் டிரம்ப் பேச்சால் இப்போது மக்கள் மிகவும் சோர்வடைந்து இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவர் தேர்தல் பிரச்சாரங்களில் பேசுவது அப்படி தான் இருக்கிறது. மக்கள் கண்டிப்பாக தெளிவாக இருப்பதால், இந்த முறை ஒரு பெண்ணை தான் அதிபராகத் தேர்வு செய்வார்கள்” என தேர்தலில் வெற்றி பெற தான் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறேன் என்பதை கமலா ஹாரிஸ் சொல்லாமலே சொல்லியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror
Khawaja Asif
Pahalgam Terrorist Attack