இந்தியாவில் களமிறங்கியது ‘மெர்ஸிடஸ் பென்ஸ் AMG G 63’..! விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் களமிறங்கி இருக்கும் பென்ஸ் AMG G 63, 29 வகை கலரில் வெளியாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை காரை இந்தியாவில் களமிறக்கி உள்ளனர். இந்தியாவில், ரூ.3.6 கோடியாக (X ஷோரூம் விலை) இதன் ஆரம்ப விலையை நிர்ணைத்துள்ளது மெர்ஸிடஸ் நிறுவனம்.
மெர்ஸிடஸ் பென்ஸ் AMG G 63 சிறப்புகள் :
- இது, 29 வகையான கலர்களில் உள்ளதாகவும், மேலும் 31 வகையான குஷன்ஸ் இருக்கைகளில் களமிறங்கி இருப்பதாக மெர்ஸிடஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில், இந்த காரின் அறிவிப்பு வெளியான முதல் தற்போது வரையில் மொத்தம் 120 முன்பதிவுகளை நிரப்பி உள்ளதாக மெர்ஸிடஸ் தெரிவித்துள்ளது.
- இதே ஆண்டில், மெர்ஸிடஸ் – பென்ஸ் வெளியிடும் 13-வது லாஞ்ச் இதுவாகும். இதனைத் தொடர்ந்து மேற்கொண்டு இந்த ஆண்டின் இறுதிக்குள் அடுத்த காரையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, வரும் நவம்பர் கடைசி அல்லது டிசம்பர் மாதத்தில் அந்த கார் லாஞ்ச் இருக்குமென கூறப்படுகிறது.
இன்ஜின் :
- தற்போது புதிதாக களமிறங்கியுள்ள இந்த AMG G 63-ல் 4 லிட்டர் அடங்கிய V8 இன்ஜினால் உருவாக்கப்பட்டுள்ளது. இது, 48V ஹைபிரிட் சிஸ்டமாகும். இதனால், 577 bhp வரையிலும் மற்றும் 850nM டார்க் வரையிலும் அதிக அளவிலான பவரை உருவாக்க முடியும் என கூறுகின்றனர்.
- இதனைத் தாண்டி இந்த ஒரு ரேஸ் ஸ்டார்ட் சிஸ்டமாக, அதாவது ரேஸ் கார்கள் தயாரிக்கும் முறையில் இன்ஜின் வடிவமைக்க பட்டுள்ளது. இதன் மூலம், 4.3 நொடிகளிலேயே(Pickup) 100 kmph என்ற வேகத்தை அடைந்து விடும் என கூறுகிறார்கள். அதை போல 240 kmph என்ற உச்ச வேகத்தில் செல்லும் என தெரிவித்துள்ளனர்.
வெளித்தோற்றம் :
- இந்த மெர்ஸிடஸ் பென்ஸ் AMG G 63 வெளித்தோற்றம் என்பது பெரிதளவு மாற்றம் செய்யவில்லை என்றாலும் இதற்கு முன்னர் வெளியான கார்களை போலவே இந்த காரில் செல்லும் அதே உணர்வை தரும் என தெரிவிக்கின்றனர்.
- மேலும், இதனது வீல்கள் (Wheels) அலாயால் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் காரின் மேற்கூரை LED-ஆல் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர்.
இந்தியாவில் இதற்கு முன்னதாக வெளியாகி இருந்த இதே பிராண்டின் கார்களை விட இதற்கு எதிர்பார்ப்பு சற்று உயர்வாக இருக்கிறது, இதனால் தான் 120 புக்கிங் அதாவது முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனால், இந்த மெர்ஸிடஸ் பென்ஸ் AMG G 63 கார்களுக்கு சிறப்பான வரவேற்பு என்பது கிடைத்துள்ளதாக தெரிகிறது.