எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் மதிப்பு அடமானம் வைக்கப்பட்டிருந்தது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK stalin - Edappadi Palanisami

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு மேடையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நாமக்கல் மாவட்டம் தான் எனவும் நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைவது மிகவும் பொருத்தமானது எனவும் உறையற்றினார்.

தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு சரிந்து விட்டதாக முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்தும் முதலவர் ஸ்டாலின் அந்த மேடையில் பேசி இருந்தார். இது குறித்து பேசிய அவர், “நாமக்கல் மாவட்டத்துக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளைத் தொடக்கிவைத்துவிட்டு உங்கள் முன்பு நிற்கிறேன்.

நாமக்கல்லை மாவட்டமாக மாற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதன் பின் மாநகராட்சியாக தரம் உயர்த்தியது திமுக அரசு. மாவட்ட வாரியாக நேரடியாகச் சென்று கள ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளேன். திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

அவர் கனவுலகில் இருக்கிறாரா? எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதை மக்கள் காமெடியாக எடுத்துக்கொள்கின்றனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போது தமிழகத்தின் மதிப்பு என்பது அடமானம் வைக்கப்பட்டிருந்தது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட அதிமுகவைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டும் நம்ம திராவிட மாடல் ஆட்சியால், தொடர்ந்து தமிழ்நாட்டை தலைநிமிர்ந்து நடைபோட வைப்போம். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மையாக உயர்த்துவோம்”, என முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்