டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!
டானா புயல் நாளை (அக்.23) இது டானா புயலாக மேலும் வலுப்பெற்று, வரும் அக்.25-ல் ஒடிஷாவில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது. இதனையடுத்து, புயல் கரையை எப்போது கடக்கும் என்பது பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எப்போது கரையை கடக்கும் இதனால் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என்பது பற்றியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று (21-10-2024) மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்தது.
இன்று (22-10-2024) காலை 0530 மணி அளவில், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில், பாரதீப்பிற்கு (ஒடிஷா) தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கு- தென்கிழக்கே 750 கிலோமீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 730 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது மேலும், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், 23-ஆம் தேதி வாக்கில் புயலாக (டானா) வலுபெறக்கூடும். இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவக்கூடும்.
இது, வடக்கு ஒடிஷா- மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24 ஆம் தேதி இரவு 25 ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். முன்னதாக புயல் 23 -ஆம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2 நாள் தள்ளிச்சென்றுள்ளது.
புயல் நாளை கரையை கடக்கவுள்ள காரணத்தால் ஒடிஷா பகுதியில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒடிசாவின் பல இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை (20 செ.மீ.) பதிவாகலாம், சில இடங்களில் மிக அதிக மழை (20 செ.மீ. முதல் 30 செ.மீ.) வரை இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.