சளி ,இருமல் ,உடல் வலியை குணமாக்கும் சுக்கு பால் செய்யும் முறை..!
தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை –தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- பச்சரிசி= 2 ஸ்பூன்
- உளுந்து= 2 ஸ்பூன்
- வெந்தயம்= அரை ஸ்பூன்
- சுக்கு= இரண்டு துண்டு
- மிளகு =10
- தேங்காய்= ஒரு மூடி
- கருப்பட்டி =தேவையான அளவு
- ஏலக்காய்= 2
செய்முறை;
முதலில் அரிசி ,வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சுத்தம் செய்து கழுவி ஊற 2 மணிநேரம் வைத்துக் கொள்ளவும்.சுக்கையும் இடித்து தனியாக ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து அரிசி, வெந்தயம், உளுந்து இவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீரும் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேங்காய்,மிளகு, ஏலக்காய் மற்றும் சுக்கை சேர்த்து மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து கொள்ளவும் . இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள அரிசி உளுந்து மாவை ஊற்று கட்டிகள் இல்லாமல் கலந்து விட வேண்டும்.
பிறகு அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும். கெட்டி பதத்திற்கு வந்த பிறகு கருப்பட்டி தண்ணீரையும் சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள தேங்காய் சுக்கு பாலை எடுத்து அதில் ஊற்றி கலந்து ஒரு நிமிடம் கழித்து இறக்கி விடவும். இப்போது சுவையான ஆரோக்கியமான சுக்கு பால் தயாராகிவிடும்.