அதிரடியாக வெளியானது ‘அஜித்குமார் கார் ரேஸிங்’ அணியின் லோகோ.!

புதிதாக அமைக்கப்பட்டுள்ள அஜித் குமார் ரேசிங் அணிக்கு, அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Ajith Kumar car race

சென்னை : நடிகர் அஜித் குமார் 2025-ல் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணியின் லோகோ வெளியானது.

மேலும், அந்த  அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயலடுவார். அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். கார் ரேஸில் இருந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் அஜித் குமார் மீண்டும் களமிறங்கி உள்ளார்.

இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அஜித் குமார் ரேசிங் அணிக்கு, அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் கடைசியாக பங்கேற்ற அஜீத் குமார், அடுத்த ஆண்டு துபாயில் ஜனவரி 9 முதல் 12 வரை நடைபெறும் Michelin Dubai 24H 2025 மற்றும் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப், போர்ஸ் 992 GT3 கோப்பை பிரிவில் பங்கேற்கிறார்.

அஜித் முதலில் 2002 இல் தேசிய ஃபார்முலா இந்தியா ஒற்றை இருக்கை சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து 2003 இல் ஃபார்முலா BMW ஆசியா சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 (ஸ்காலர்ஷிப் வகுப்பு) ஆகியவற்றிலும் பங்கேற்றார்.

2010 இல் ஐரோப்பிய ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்குப் பிறகு அவரது ரேஸ் வாழ்க்கை ஒரு சாலை விபத்தில் பிரேக் எடுத்து கொண்டு, மீண்டும் அதே ஆர்வத்துடன் வேகத்துடன் செயல்பட ஒரு முடிவில் தற்போது  களமிறங்கி இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்