கால் வலி குணமாக வேண்டுமா.? இந்த வைத்தியத்தியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..,
கால் வலி வருவதற்கான காரணமும் அதற்கான வீட்டு வைத்திய குறிப்புகளையும் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
கால் வலி வருவதற்கான காரணமும் அதற்கான வீட்டு வைத்திய குறிப்புகளையும் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை : நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்வது, அதிக தூரம் நடப்பது, உடல் பருமன் அதிகரிப்பு, எலும்பு மூட்டு காயங்கள், தசை நார்களில் எரிச்சல், சுருள் நரம்பு, ரத்தம் உறைதல் ,வைட்டமின் பி6, பி 9 குறைபாடு, கிட்னி பாதிப்பு ,தைராய்டு, பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் காலகட்டம், கால் பாதம் வளைவாக இல்லாமல் பிளாட்டாக இருப்பது மற்றும் அதிக அளவு ரத்த ஓட்டம் போன்ற பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு கால் வலி வரக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கால் வலி குணமாக வீட்டு வைத்தியம் :
நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன், விளக்கெண்ணெய் இரண்டு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும் .இந்த கலவையை ஏழு நாட்கள் வெளியிலே வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இவற்றை வலி உள்ள இடத்தில் தேய்த்து ஐந்து நிமிடம் மசாஜ் செய்து இரண்டு மணி நேரமாவது வைத்திருக்க வேண்டும்.
இதுபோல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கால் வலி குறைய ஆரம்பிக்கும். அதோடு மட்டுமல்லாமல் சரியான உணவு முறைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் கால் வலி என்பது சத்து குறைபாடு காரணமாகவும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நம் உடலுக்கு சப்போர்ட் என்றால் அது எலும்புகள் தான். எலும்பை வலிமையாக வைத்துக் கொண்டால் கால் வலி வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள உணவுகளான பால், முட்டை, மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்வதோடு தினமும் சூரிய ஒளியில் 20 நிமிடங்கள் நிற்பது அவசியம். அதுமட்டுமல்லாமல் பொட்டாசியம் நிறைந்த உலர் திராட்சை மற்றும் விதை வகைகளான வேர்க்கடலை, பாதாம் பருப்பு, முந்திரி போன்றவற்றை தினம்தோறும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், தினமும் தூங்கச் செல்வதற்கு முன் சுடு தண்ணீரில் உப்பு சேர்த்து கால்களை கழுவி நன்கு துடைத்து தேங்காய் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்து வரலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கால் வலிகள் வருவதை தடுக்கலாம். மேலும், கால் வலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பான முறையில் மருத்துவ உதவியை நாடவும்..