இரவு 10 மணி வரை இந்த 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்.!
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (10 மணி வரை) தமிழ்நாட்டில் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 22ம் தேதி தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (10 மணி வரை) தமிழ்நாட்டில் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு , நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 22 மாவட்டங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 20, 2024