IND vs NZ : “இந்தியா தோல்விக்கு இது தான் காரணம்”..கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!!
முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா பின்னடைவை சந்தித்த காரணம் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய தோல்வி அடைந்த காரணத்தால் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
Read More- IND vs NZ : முதல் டெஸ்ட் முடிவு! 36 வருடங்களுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து!
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தோல்விக்கான காரணம் குறித்துப் பேசினார். இது குறித்துப் பேசிய அவர் ” முதல் நாளில் நடைபெற்ற முதல் இன்னிங்ஸில் குறைவான ரன்களை எடுத்தது தான் இந்த போட்டியில் தோல்வி பெற ஒரு பின்னடைவுக்கான காரணம். அன்றைய தினத்தில் மேகமூட்டமான சூழல் மற்றும் ஆடுகளம் சரியில்லாமல் இருப்பதால் இது சவாலாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும்.
ஆனால், 50 ரன்களை கூட தாண்டாமல் நாங்கள் அவுட் ஆவோம் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அந்த இன்னிங்ஸில் இன்னும் அதிகமாக ரன்கள் எடுத்து ஒரு ஸ்கோரை செட் செய்து வைத்திருக்கவேண்டும். அதனை தவறவிட்டோம். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இப்படி நடப்பது உண்டு. இதற்கு முன்பு நாங்கள் ஒரு முறை இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்தோம். ஆனால், அதே தொடரை நாங்கள் 4-1 என்ற கணக்கில் வென்றோம்.
அதைப்போலத் தான் இந்த தொடரிலும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளது. எனவே நாங்கள் எங்கள் சிறந்த ஆட்டத்தை முன்னோக்கி வைக்க முயற்சிப்போம்” என ரோஹித் சர்மா கூறினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை பாராட்டிப் பேசினார். இருவரையும் பற்றி ரோஹித் சர்மா கூறுகையில்” இவர்கள் இருவருடைய பேட்டிங் அணிக்குப் பக்க பலமாக இருந்தது. அவர்கள் விளையாட்டை எவ்வளவு நேசித்து விளையாடுகிறார்கள் என்பது அவர்களுடைய விளையாட்டை பார்க்கும்போது தெரிகிறது.
ரிஷப் பேட்டிங் நன்றாக இருந்தது. ஆனால், அவர் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கிறார் என்று நான் நினைத்தேன். இருந்தாலும் அருமையாக விளையாடினார். அதைப்போல, சர்ஃபராஸ் கான் விளையாட்டை யாரும் மறந்துவிடக்கூடாது. அந்த அளவுக்குச் சிறப்பாக விளையாடினார். என்னென்ன ஷாட்களை ஆடவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் ” எனவும் ரோஹித் சர்மா தெரிவித்தார்.