தொடர் அச்சுறுத்தல்கள்: விஸ்தாராவின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!
சிங்கப்பூர்- மும்பை, சிங்கப்பூர்- டெல்லி, சிங்கப்பூர்- புனே, பாலி- டெல்லி, டெல்லி- பிராங்பேர்ட் உள்ளிட்ட விஸ்தாரா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாந்துள்ளது.
புதுடெல்லி: கடந்த ஒரு வாரமாக பல்வேறு இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நிலையில், இன்றும் பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற 6 விஸ்தாரா விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. விஸ்தாரா நிறுவனத்தின் மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் உள்ளிட்ட 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆறு விமானங்களின் பட்டியல்
- UK25 விமானம் (டெல்லி முதல் பிராங்பேர்ட்)
- UK106 விமானம் (சிங்கப்பூர் முதல் மும்பை)
- UK146 விமானம் (பாலி முதல் டெல்லி வரை)
- UK116 விமானம் (சிங்கப்பூர் முதல் டெல்லி)
- UK110 விமானம் (சிங்கப்பூர் முதல் புனே வரை)
- UK107 விமானம் (மும்பை முதல் சிங்கப்பூர்)
30 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நேற்றைய தினம் (சனிக்கிழமையன்று) இந்திய விமான நிறுவனங்களின் 30க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் பாதுகாப்பு அமைப்புகள் மத்தியில் பீதியை உருவாக்கியுள்ளன. இதனை தொடர்ந்து, விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஏழு நாட்களில் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.