“அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அல்ல” – தவெக தலைவர் விஜய்!!

நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் அட்வைஸ் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

vijay

விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.  இந்த விழாவில் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மாநாடு நடைபெற இன்னும், சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில்,  மாநாடுக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Read More – தவெக மாநாடு : “நீங்கள் வீட்டிலிருந்தே பாருங்கள்”…தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!

இந்த சூழலில், கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் தவெக மாநாட்டை வீட்டிலிருந்தே பார்க்குமாறு அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை வெளியீட்டு வேண்டுகோள் வைத்து இருந்தார். அதைப்போல, அறிக்கையில் தெரிவித்துள்ள சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அவர் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி வெளியீட்டு இருக்கும் அந்த வேண்டுகோள் கடிதத்தில் முக்கியான விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால்,  “அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி” என்று கூறியதை தான். இதன் மூலம், அரசியல் களத்தில் அதிகம் பேசாமல் தாங்கள் செய்யும் நல்ல வேலை தங்களுடைய செயல்கள் மூலம் தான் தெரியும் என அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.

அதைப்போல, ” நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனவும் விஜய் கூறியிருக்கிறார்.

அதாவது, விஜய் சினிமாவில் நடிகராக இருந்த போது ரசிகர்கள் அவரை கொண்டாடச் சந்தோசமாகப் பல விஷயங்கள் செய்தது சில சமயங்களில் சர்ச்சைகளையும் ஆகியது. ஆனால், இப்போது விஜய் அரசியல் தலைவராகியிருக்கிறார். எனவே, அவருடைய ரசிகர்கள் தொண்டர்களாக மாறியுள்ளதால் அந்த பொறுப்புணர்வை மனதில் வைத்துக் கொண்டு கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காக்க வேண்டும் என விஜய் தனது தொண்டர்களுக்கு அறிவுரையை வழங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்