IND vs NZ : முதல் டெஸ்ட் முடிவு! 36 வருடங்களுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

IND vs NZ

பெங்களூர் : இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது கடந்த, அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கியது. அந்த போட்டியில், குறுக்கே இந்த கவுசிக் வந்தால் என்ற படி மழை குறுக்கிட்டதன் காரணமாகப் போட்டியின் முதல் நாள் நடைபெறாமல் போனது.

அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த தினம் இரண்டாம் நாள் போட்டியானது தொடங்கியது . அதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய அணிக்கு அன்றைய நாள் சோதனையாக அமைந்தது. மிக மோசமாக விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு நியூசிலாந்து அணியிடம் சுருண்டது.

இது இந்திய அணிக்கு இந்த போட்டியில் பெரும் பின்னடைவாக அமைந்தது. நியூசிலாந்து அணியில், மேட் ஹென்றி 5 விக்கெட்டும், ஓ ரூக் 4 விக்கெட் கைப்பற்றி இருந்தனர். அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு பேட்டிங் களம் இறங்கியது. இதில் சிறப்பாக, விளையாடிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு 356 ரன்கள் முன்னிலை யாக ஸ்கோரை செட் செய்தனர்.

அதாவது நியூசிலாந்து அணி, தங்களது முதல் இன்னிங்ஸில் 406 ரன்கள் எடுத்திருந்தது. அதில், அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், இந்தியா அணியில் குல்தீப் யாதவும், ஜடேஜாவும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

அதன் பின், 600 ரண்கலாவது குறைந்தது எடுக்க வேண்டும் என பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணி நல்ல ஒரு தொடக்கத்தை அமைத்தது. அதிலும் முதல் இன்னிங்ஸில் கோட்டை விட்ட நட்சத்திர வீரர்கள் இந்த இன்னிங்ஸில் சிறப்பாகவே விளையாடினார்கள் அதன்படி ரோகித் சர்மா 52 ரன்களும், விராட் கோலி 70 ரன்களும், சர்ஃபராஸ் கான் 150 ரன்களும், பண்ட் 99 ரண்களும் எடுத்திருந்தனர்.

இருப்பினும் இந்திய அணி, 99.3 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 462 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி நியூசிலாந்து அணியை விட 88 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு 89 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, கடைசி நாளான (5-ஆம் நாள்) இன்று காலை மழைக்காரணமாக தாமதமாகவே போட்டியானது ஆரம்பிக்கப்பட்டது.

இதில் பேட்டிங் செய்ய களமிறங்கிய  நியூசிலாந்து அணி தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், போகப்போக…நிதானமாக விளையாடி இலக்கை எட்டியது. அதன்படி, 27.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதில், வில் யங் 48 * ரன்களும், ரச்சின் ரவீந்திரன் 39 * ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.

இந்தியாவில் கடந்த 36 வருடங்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்த முடியாமல் இருந்தது. தற்போது பல ஆண்டுகள் கழித்து நியூசிலாந்து அணி இந்தியாவைச் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. மேலும், இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்று வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் அக்.-27-ஆம் தேதி புனைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்