தவெக மாநாடு : “நீங்கள் வீட்டிலிருந்தே பாருங்கள்”…தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!

கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் தவெக மாநாட்டை வீட்டிலிருந்தே பார்க்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.

tvk vijay

விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27-ம் தேதி  மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. மாநாடு நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மாநாடுக்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இது முதல் மாநாடு என்பதால் பலரும் மாநாட்டிற்கு வருகை தருவார்கள். எனவே,  மாநாடுக்கு வருகை தருபவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லவேண்டும் என்று அவர்களுடைய பாதுகாப்பு  மிகவும் முக்கியம் என்பதை கட்சி  தலைவர் விஜய் கவனித்தில் எடுத்துக்கொண்டு தொண்டர்களுக்கு மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அறிவுரை ஒன்றை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் ” மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும்.

இந்த நெகிழ்வான நேரத்தில், முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள். முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன்.

உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது.
ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும்.அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம்.

அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும்.

அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம்” என கூறியுள்ளார்.

கண்டிப்பாக மாநாட்டுக்குக் கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் வருகிறார்கள் என்றால் கூட்டம் அதிகமாக இருப்பதால் நிச்சயமாகச் அவர்களுக்கு சிரமமாக இருக்கும் எனவே, அவர்கள் சிரமம் படக் கூடாது என்பதற்காகத் தான் விஜய் இப்படியான வேண்டுகோளை வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi
Chennai High Court tn government
China chips