புயலால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்கா? வெதர்மேன் கொடுத்த விளக்கம்!

அக்டோபர் 24-25 தேதிகளில் வரும் புயல் ஒடிசா கடற்கரையை நோக்கிச் செல்லும் என்பதால் தமிழகத்தை பாதிக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விளக்கம்.

Tamil Nadu Weatherman

சென்னை : தமிழகத்தில் வடகிழக்குக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால், வருகின்ற டிசம்பர் மாதம் வரும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், கடல்களில் காற்றழுத்த தாழ்வுகளும் உருவாகி வருகிறது. அந்த வகையில், வருகின்ற 21-ஆம் தேதி வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.

அதன்பிறகு, இந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறி வடக்கு வடமேற்கு திசையை நோக்கி கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் எதுவும் பாதிப்பு இருக்குமா? கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் ” அக்டோபர் 24-25 தேதிகளில் வரும் புயல் ஒடிசா கடற்கரையை நோக்கிச் செல்லும் என்பதால் தமிழகத்தை பாதிக்காது” என தெரிவித்துள்ளார். அதே சமயம், அடுத்த 10 நாட்களில் உட்புறம், கொங்கு, டெல்டா ராக். பெங்களூரில் தொடர்ந்து நல்ல மழை பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்று முதல் நாளை வரை நல்ல மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பற்றிய விவரத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் ” சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், டெல்டா மாவட்டங்கள் முழுவதும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, மதுரை, சிவகங்கை, கொடைக்கானல், திருவண்ணாமலை, விருதுநகர், திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார்.

மேலும், சென்னையில் தினமும் இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அக்டோபர் மாதத்தில் அதிக மழை பெய்து 350 மி.மீட்டரை கடந்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் 150 மி.மீட்டரை தாண்டி 70% அதிக மழை பெய்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்