வீட்டை நொறுக்கிய ஹிஸ்புல்லா …’பதில் சொல்லியே ஆகனும்’ – எச்சரிக்கை கொடுத்த நெதன்யாகு !

இஸ்ரேலின் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் வலைத்தள பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

BenjaminNetanyahu

டெல் அவீவ் : கடந்த வியாழன் அன்று ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரை இஸ்ரேல் கொன்றதை அடுத்து , லெபனான் கூட்டாளியான ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு எதிரான போரை அதிகரிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தது இருந்தது. இதனையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Read More- யாஹியா சின்வர் உயிரிழப்பு : கடைசி நிமிட வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்!

குறிப்பாக, லெபனானில் இருந்து இன்று காலை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் வடக்கே சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் பெஞ்சமின் நெதன்யாகு வீடு முழுவதுமாக நொறுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதல் நடந்த சமயத்தில், நெதன்யாகு அங்கு இல்லாததால் உயிர்ச் சேதம் ஏதும் பெரிதாக ஏற்படவில்லை.

இருப்பினும், இந்த தாக்குதலில், 180க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்ட காரணத்தால் இஸ்ரேலிய துறைமுக நகரமான ஏக்கரில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ” ஈரான் தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் கொல்ல முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.

இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் பேசியதாவது ” இன்று என்னுடைய வீட்டின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஈரான் பெரிய விலை தரவேண்டியிருக்கிறது” என இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என்கிற தோரணையில் கூறினார்.

அதைப்போல, அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்திலும், தன்னுடைய வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில் ” இன்று என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு. இது என்னையும் இஸ்ரேல் அரசையும் நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளுக்கு எதிரான நமது நியாயமான போரைத் தொடர்வதிலிருந்து தடுக்காது.

இஸ்ரேலின் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க நேரிடும். தீவிரவாதிகளையும், அவர்களை அனுப்புபவர்களையும் ஒழிப்போம்.எங்கள் பணயக்கைதிகளை காசாவில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவோம்.நமது வடக்கு எல்லையில் வசிக்கும் குடிமக்களை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்புவோம்.ஒன்றிணைந்து போராடுவோம், மற்றும் கடவுளின் உதவியுடன் –
ஒன்றாக, நாம் வெற்றி பெறுவோம்” என பதிவிட்டுள்ளார். இவர் கூறிஉள்ளதன் மூலம் மீண்டும் போர் பெரியதாக வெடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்