தீபாவளி ஸ்பெஷல்..! பேக்கரி சுவையில் ஜாங்கிரி செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கம் இதோ..!

ஸ்வீட் கடைகளில் கிடைக்கும் ஜாங்கிரியை போல் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

jangiri (1)

சென்னை –ஸ்வீட் கடைகளில் கிடைக்கும் ஜாங்கிரியை போல் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள்;

  • முழு உளுந்து =ஒரு கப்
  • சர்க்கரை= 2 கப்
  • ஃபுட் கலர்= ஒரு ஸ்பூன்
  • அரிசி மாவு= ஒரு ஸ்பூன்

ulunthu (3) (1)

 

செய்முறை;

உளுந்தை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸி அல்லது கிரைண்டரில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது .அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் அரிசி மாவு மற்றும் ஃபுட் கலர் அரை ஸ்பூன் சேர்த்து 10 -15 நிமிடம் நன்கு கலந்து கொள்ளவும். இப்போது சர்க்கரையை   ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளவும். ஒரு கம்பி பதம் வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அரை ஸ்பூன் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளவும்.

sugar (2) (1)

இப்போது  ஒரு அகலமான பாத்திரத்தில் பொரிக்க தேவையான எண்ணெயை ஊற்றி  சூடாக்கிக் கொள்ளவும். பின்பு  பைப்பிங் கவர் அல்லது பால் பாக்கெட் கவர் ஏதேனும் ஒன்றை எடுத்து ஒரு பெரிய டம்ளரில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் கலந்து வைத்துள்ள மாவை சேர்த்து விட்டு அதன் மூலையில் சிறிய ஓட்டையாக   நறுக்கிக் உங்களுக்குப் பிடித்த டிசைனில் ஜாங்கிரியை  எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு பொரித்து எடுத்து  உடனே தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப்பாகுவில் சேர்த்து பத்து நிமிடம் ஊற வைத்து எடுத்தால் சுவையான ஜாங்கிரி தயார். [ஜாங்கிரி சுடும் போது எண்ணையை மிதமான தீயில் வைத்து பொரிக்கவும்] .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்