கோட் படம் பார்த்த ரஜினிகாந்த்! வெங்கட் பிரபுவுக்கு கால் செய்து பாராட்டு!

வெங்கட் பிரபு மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து படம் செய்யவேண்டும் என ரசிகர்கள் தங்களுடைய ஆசையை தெரிவித்து வருகிறார்கள்.

rajinikanth the greatest of all time

சென்னை : ரஜினிகாந்த் எப்போதுமே நல்ல படங்கள் வெளியானால் அந்த படங்களைப் பார்த்துவிட்டுப் பாராட்டிய தவறியது இல்லை என்றே சொல்லலாம். ஒரு சில படங்கள் மிகவும் பிடித்துவிட்டது என்றால் அந்த படத்தின் இயக்குநரிடம் கதை கேட்டு அவர்களுடன் படமும் செய்து விடுவார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், ஜெயிப்பீம் படத்தைப் பாராட்டி விட்டு அந்த இயக்குநருடன் வேட்டையன் படம் செய்தார்.

அதைப்போல விக்ரம் படம் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில், அவர் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக ஹிண்ட் ஒன்றைக் கொடுக்கும் வகையில் அவருடைய இயக்கத்தில் வெளியான கோட் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

கோட் படம் பெரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளியாகி உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தது. இந்த சுழலில், படத்தினை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குக் கால் செய்து படத்தைப் பற்றிப் பாராட்டி சில விஷயங்களைப் பேசியுள்ளார். படம் பார்த்துவிட்டுப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ்வலைத்தள பக்கத்தில் வெங்கட் பிரபு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” கோட் படத்தைப் பார்த்துவிட்டு எனக்குத் தொடர்பு கொண்டு வாழ்த்தியதற்கு நன்றி ரஜினிகாந்த் தலைவா.. உங்கள் மீது எனக்கு எப்போதும் அன்பு இருக்கும். என்றென்றும் நன்றி தலைவா” என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

கோட் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில், வெங்கட் பிரபுவிடம் எதாவது கதை இருக்கிறதா என்று கேட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோட் படத்தை ரஜினிகாந்த் பாராட்டிய தகவலைப் பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுடைய கூட்டணி இணைவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்