வரலாறு படைத்த ‘தமிழ்நாடு மகளிர் அணி’! U-19 சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

நடைபெற்ற மகளிர் யு19 டி20 தொடரின் இறுதி போட்டியில் உத்தரப் பிரதேச அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

TN Womens Won U19 Champions

ஹரியானா : இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான மகளிருக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 கோப்பை தொடரானது சமீபத்தில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியானது நேற்று ஹரியானாவில் உள்ள சவுத்ரி பன்சி லால் மைதானத்தில் நடைபெற்றது.

இதில், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த தமிழ்நாடு மகளிர் அணியும், உத்தரப் பிரதேச அணியும் மோதியது. விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் உத்தர பிரதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்து. அதன்படி, முதலில் பேட்டிங் விளையாடிய உத்தரபிரதேச அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் எடுத்திருந்தது.

அதில், உத்தரபிரதேச அணி சார்பாக அதிகபட்சமாக பூமி சிங் 21 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல தமிழ்நாடு அணியில், ஜன்லின் சந்திரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேட்டிங் களமிறங்கி நிதான விளையாட்டை விளையாடி விளையாடியது.

அதன்படி, சரியாக 19.1 ஓவர்களில் 68 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் ‘த்ரில்’ வெற்றியைப் பெற்று அசத்தியது. தமிழ்நாடு மகளிர் அணியின் அதிகபட்சமாக ரினாஸ் 23 ரன்கள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் வரலாற்றில் முதல் முறையாக யூ-19 டி20 சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது தமிழ்நாடு மகளிர் அணி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்