ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,880-க்கும், கிராமுக்கு ரூ.7,735 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, இன்று ரூ.58,000-ஐ கடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி (19-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,280-க்கு விற்பனை. சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,880-க்கும், கிராமுக்கு ரூ.7,735 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை 2 ரூபாய் உயர்ந்து கிராம் ஒன்றுக்கு ரூ.107-க்கும் கிலோவுக்கு ரூ.107,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.