இன்னைக்கு IND vs NZ மேட்ச் நடக்க வாய்ப்பே இல்லை.! வெதர்மேன் ‘ஷாக்’ ரிப்போர்ட்.!
இன்று இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக நடைபெறாது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தென்னிந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் தற்போது மழைபெய்து வருகிறது.
ஏற்கனவே வடமேற்கு பருவமழை தொடங்கி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வரும் சூழலில், பெங்களூரு பகுதியிலும் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் வானிலை நிலவரம் கூறுவது போல சில தனியார் வானிலை ஆர்வலர்களும் வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறி வருகின்றனர்.
அப்படி, தமிழக்த்தில் வானிலை நிலவரங்ளை கூறும் வானிலை ஆர்வலர்களில் முக்கியமானவர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். பெரும்பாலும் இவரது கணிப்புகள் சரியாக அமைந்துள்ளன. இவர் இன்று காலை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் மேட்ச் நடைபெறும் இடத்தின் வானிலை நிலவரம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், இன்றைய வானிலை நிலவரப்படி இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 100 சதவீதம் நிச்சயம் நடைபெறாது என பதிவிட்டுள்ளார்.
Ind vs NZ Weather Update
——–
Today rains will 100% affect the match at Bengaluru— Tamil Nadu Weatherman (@praddy06) October 19, 2024
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இன்னிங்சில் 48 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகினர். நியுசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடி வருகிறது. தற்போது வரையில் சர்பிராஸ் கான் சதத்துடன் 293 ரன்களை கடந்துள்ளது.