வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தின் காலில் கட்சி நிர்வாகிகள் விழுவது பேசுபொருளான நிலையில் இன்று நடைபெற்ற தவெக கூட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார்.

Bussy Anand And Thadi Balaji

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநாடு வேலைகளில் அக்கட்சி பொதுச்செயலாளர் N.ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது கட்சிப் பணி சார்ந்து அவரை சந்திக்க வரும் நிர்வாகிகள் ஆனந்த்தின் காலில் விழுந்து வணங்குகின்றனர்.

சமீபத்தில் கூட நடிகர் தாடி பாலாஜி (தவெக கட்சி உறுப்பினர்) புஸ்ஸி ஆனந்தை சந்திக்கும் போது அவர் காலை தொட்டு வணங்க சென்றார்.  இம்மாதிரியான செய்கையின் போது புஸ்ஸி ஆனந்த் அதனை தடுக்க முயற்சிப்பது போல தெரிந்ததாலும், இந்த காலில் விழும் நடைமுறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அரசியல் களத்தில் பெரியாரிசம் பேசும் தவெக தலைவர் விஜய், தனது கட்சியில் ஒருவரது காலில் இன்னொரு சக மனிதர் விழுந்து வணங்குவதை எப்படி ஏற்றுக்கொள்கிறார் என்ற கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படியான சூழலில் தான் இன்றைய தவெக ஆலோசனை கூட்டத்தில் காலில் விழுவது குறித்து திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார் புஸ்ஸி ஆனந்த்.

இன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மன்பாளையத்தில் நடைபெற்ற தவெக அரசியல் பயிலகம் நிகழ்வில் பேசிய ஆனந்த், “உங்கள் அம்மா அப்பாவின் காலில் மட்டுமே விழ வேண்டும். வேறு யாருடைய காலிலும் விழக்கூடாது.” என தவெக கட்சித் தொண்டர்களுக்கு மறைமுகமாக அட்வைஸ் செய்துள்ளார் புஸ்ஸி ஆனந்த். இதனை தொண்டர்கள் பின்பற்றி காலில் விழும் கலாச்சாரத்தை கைவிடுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்