பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

நடைபெற்ற மகளிர் டி20 அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

South African Womens

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியும், தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

நல்ல ஒரு தொடக்கத்தை கொடுக்கத் தவறிய கிரேஸ் ஹாரிஸ் 3 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஜார்ஜியா வேர்ஹாம் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின், தஹ்லியா மற்றும் பெத் மூனி இருவரும் நல்ல ஒரு பார்ட்னெர்ஷிப்பை அமைத்தனர். இதனால், ஆஸி. அணி நல்ல ஒரு ரன்களை நோக்கி பயணித்தது.

இதில் துரதிஷ்டவசமாக தஹ்லியா 27 பெண்களுக்கு ஆட்டம் இழக்க அவரைத் தொடர்ந்து, பெத் மூனியும் 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னால் வந்த எல்லிஸ் பெர்ரி அவரது பங்கிற்கு 31 ரன்கள் சேர்த்தார். இதனால், 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 134 ரன்கள் சேர்த்தது.

தென்னாப்பிரிக்க மகளிர் அணியில் அதிகபட்சமாக அயபாங்க காகா 2 விக்கெட்டுகளைக் கைப்பெற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்து, 13.5 என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது. அதில் தொடக்க வீராங்கனையும், அணியின் கேப்டனுமான லாரா வால்வாரட் தொடக்கம் முதலே அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தினார்.

இதனால், 37 பந்துக்கு 42 ரன்கள் சேர்த்த அவர் ஒரு கட்டத்தில் ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய மற்றொரு அதிரடி வீராங்கனையான அன்னிக்கே போஸ்ச் வானவேடிக்கை காட்டினார். இவரது விளையாட்டு ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு சவாலாக அமைந்தது.

இறுதி வரை அவரது விக்கெட்டை பறி கொடுக்காமல் அணிக்காக சிறப்பாக விளையாடினார். வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த தென்னாபிரிக்கா அணி 17.2 ஓவர்களில் 135 என்ற இலக்கை எட்டியது.

இதன் காரணமாக, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி வெற்றி பெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் நடைபெற்று வரும் டி20 மகளிர் உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்