தீபாவளி ஸ்பெஷல்.! முறுக்கு சுட இனிமேல் மாவு அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.. பொட்டுக்கடலை இருந்தா போதும்..!
மாவு அரைக்காமலே மொறு மொறுவென முறுக்கு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை –மாவு அரைக்காமலே மொறு மொறுவென முறுக்கு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருள்கள்;
- அரிசி மாவு= மூன்று கப்
- பொட்டுக்கடலை மாவு =ஒரு கப்
- மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
- ஓமம்= கால் ஸ்பூன்
- எள்ளு =ஒரு ஸ்பூன்
- பெருங்காய தூள் = ஒரு சிட்டிகை
- எண்ணெய் =பொரிக்க தேவையான அளவு
- தண்ணீர்= இரண்டிலிருந்து மூன்று கப் அளவு
தேவையான செய்முறை;
பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதனுடன் அரிசி மாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் இப்போது எடுத்து வைத்துள்ள உப்பு, கருப்பு எள்ளு ,மிளகாய்த்தூள், ஓமம் பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து மாவில் சேர்த்து நன்கு கலந்து கொண்டு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். மாவு சாப்ட்டாக பிசைய வேண்டும், அப்போதுதான் முறுக்கு கிரிபிசியாக இருக்கும்.
இப்போது மாவு பிசைந்த பிறகு மேலாக எண்ணெய் சேர்த்து தடவி விட்டு அதை சிறிது சிறிதாக பிரித்து முறுக்கு அச்சில் சேர்த்து அன்ன கரண்டியில் பிழிந்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அகலமான பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கி கொள்ள வேண்டும். சூடான எண்ணெயில் நாம் பிழிந்து வைத்துள்ள முறுக்கு மாவை சேர்த்து ஒரு நிமிடம் வேகவைத்து பிறகு மற்றொரு புறத்தையும் வேக வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுவென முறுக்கு தயாராகிவிடும் .