“கேப்டனுக்கு கேப்டன் அட்வைஸ்” தோல்மேல ‘கைய போடு’ கோலி..!!
கொல்கத்தா:
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து மண்ணில் சரமாரியாக தொடர் தோல்வியை தழுவியுள்ளது.
டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இதுகுறித்து பேசிய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில்,
“வீரர்களின் தன்மையை போஸ்ட் மார்டம் செய்வதைவிட, திறமைகளை அங்கீகரிப்பதே முக்கியம். புஜாரா, ரஹானே, கேஎல் ராகுல் போன்றோர் இத்தொடரில் ஆடியதைவிட 10 மடங்கு சிறந்த பேட்ஸ்மென்கள். ஒரு பொறுப்பான கேப்டனாக கோலிக்கு இது அரவணைக்கும் நேரம். வீரர்களின் தோளில் கை பேட்டு அரவணைத்து, வெற்றிகளைப் பெற்றுத் தருமாறு பேச வேண்டும்.
அப்படித்தான் அவர்களிடமிருக்கும் சிறப்பான தனித் திறமைகளை வெளிக் கொண்டுவர முடியும். இதன்மூலம் ஆட்டத்திறன் தானாக மேம்படும்” என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
DINASUVADU