மீண்டும் ஹரியானா முதலமைச்சராக பதவியேற்ற நயாப் சிங் சைனி!
ஹரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் நிலையில், இரண்டாவது முறையாக நயாப் சிங் சைனி முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஹரியானா : மாநில முதல்வராக 2வது முறையாக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றுக்கொண்டார். நடைபெற்று முடிந்த தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்த நிலையில், ஏற்கனவே,முதலமைச்சராக இருந்த நயாப் சிங் சைனி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனார்.
இவருடைய பதவியேற்பு விழா இன்று சண்டிகர் அருகே உள்ள பஞ்ச்குலாவின் பரேட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக உயர்மட்ட தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆளும் மாநிலங்களின் 18 முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுடைய முன்னிலையில், ஹரியானாவில் மீண்டும் முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து நேராகப் பிரதமர் மோடியிடம் சென்று அவருடைய கைகளைப் பிடித்து நன்றியைத் தெரிவிக்கும் விதமாக மகிழ்ச்சியும் வெளிப்படுத்தினார்.
அதைப்போல, பிரதமர் மோடியும் நயாப் சிங் சைனி கையை பிடித்துக்கொண்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர்களுடைய தொடர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்ற போது அவருடன் மேலும் 13 தலைவர்களும் அமைச்சர்களாக பதவிஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய பெயர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
- அனில் விஜ்
- கிருஷ்ண லால் பன்வார்
- மஹிபால் தண்டா
- கிருஷ்ண பேடி
- ராவ் நர்பீர்
- அரவிந்த் சர்மா
- சுனில் சங்வான்
- விபுல் கோயல்
- ஆர்த்தி சிங் ராவ்
- ஸ்ருதி சவுத்ரி
- ரன்பீர் கங்வா
- ராஜேஷ்
- கௌரவ் கௌதம்