IND vs BAN : மழையால் மீண்டும் தடைபட்ட போட்டி! தடுமாறிய இந்திய அணி மீளுமா?
இரண்டாம் நாளான இன்று டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டுள்ளது.
பெங்களூர் : இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக நடைபெறாமல் போனது. இதனால், இன்று காலை மழை இல்லாததன் காரணமாக, டாஸ் போடப்பட்டு போட்டியானது தொடங்கப்பட்டது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி, நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மோசமாக தடுமாறியே விளையாடி வந்தது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா 16 பந்துகள் பிடித்து 2 ரன்கள் மட்டும் எடுத்து டிம் சௌதீயின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, அடுத்தபடியாக விராட் கோலி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அதன் பின், கில்லுக்கு பதிலாக அணியில் இடம்பெற்றிருந்த சர்பராஸ் கான் பேட்டிங் விளையாட வந்தார். துரதிஷ்டவசமாக அவரும் 0 ரன்களுக்கு மேட் ஹென்றி பந்து வீச்சில் அடாமிழந்தார்.
இதனால், இந்திய அணி 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும், காலத்தில் ஜெய்ஸ்வால் 8 ரன்களுடனும், பண்ட் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சரியாக 12.4 ஓவர்களில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் போட்டியானது நிறுத்தப்பட்டது.
மேலும், பெய்து வரும் மழை சிறிய மழை என்பதால் ஆட்டம் விரைவாக மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல ஒரு நிலையில் பந்து வீசி வந்த நியூஸிலாந்து அணிக்கு இந்த சிறிய இடைவேளை வித்தியாசத்தை ஏற்படுத்துமா? இந்த சிறிய இடைவேளையை இந்திய அணி எடுத்து கொண்டு போட்டியில் மீண்டு வருமா? என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.