‘சென்னையில் இன்று வெயில் அடிக்கும்’! வெதர்மேன் சொன்ன மகிழ்ச்சி செய்தி!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில நேரம் காற்றடிக்க வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், ரெட் அலெர்ட்டும் நேற்றைய தினம் கொடுக்கப்பட்டது. ஆனால், நேற்று முழுவதும் சென்னையில் அந்த அளவிற்கு மழை பொழிவு என்பது இல்லாமல் இருந்தது.
இதனால், நேற்று இரவு ரெட் அலெர்ட்டை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுக் கொண்டது. மேலும், சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லுரிகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியரும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) அவரது எக்ஸ் பக்கத்தில் சென்னை மக்களுக்கு நற்செய்தியாக ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “நேற்று மதியம் ஒரு துளி கூட மழை பெய்யவில்லை. மேகங்கள் இல்லாத காற்றழுத்த தாழ்வு பகுதி நெல்லூருக்கு அருகில் உள்ள நிலப்பகுதியை நோக்கி நகர்கிறது. மேலும், அது கரையை கடப்பது அங்குள்ள யாருக்கும் தெரியாது. ஏனென்றால் அதில் எதுவும் மிச்சமில்லை, கடக்கும் நேரத்தில் வெயிலடிக்கலாம்.
அதே போல காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குறிப்பாக சென்னையில் இன்று நன்றாக வெயில் அடிக்கும். நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலதிற்கு தெற்கே சென்னை அமைந்திருப்பதால், மேற்குப் பக்கத்திலிருந்து சில நேரம் காற்று வீசலாம். எனவே இன்று மாலை முதல் நாளை காலை வரை வெப்ப சலனம் மழை பெய்யக்கூடும்.
சென்னை, பூண்டி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், நாகையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். ஒரு சில பகுதிகளில் சாதாரண மழை பெய்யும். சில சில இடங்களில் மழை பெய்யாது”, என தமிழ்நாடு வெதர்மேன் அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.
Final Post on the Depression
————-
Not a single drop of rain from yesterday noon. The shell depression with no clouds will move into land close to Nellore. No one there will even know that a Depression is crossing because it has nothing left in it and it will be sunny… pic.twitter.com/3VjPqV5IKM— Tamil Nadu Weatherman (@praddy06) October 17, 2024