“ஆளுநர் கையிலேயே 7 பேரின் வாழ்கை” மத்திய அமைச்சர்..!!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு , அந்த தீர்மானம் தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்குச் சென்று முதலமைச்சரை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியிருக்கக்கூடும் என்று மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்து 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு எடுக்கும் முடிவே இறுதியாக ஏற்கப்படும் என்று தெரிவித்தார்.இந்நிலையில் 7பேரின் விடுதலை தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
DINASUVADU