மகாராஷ்டிரா, ஜார்கண்ட் பொதுத்தேர்தல், வயநாடு இடைத்தேர்தல் தேதிகள் அறிவிப்பு.! 

மகாராஷ்டிராவில் நவம்பர் 20லும், ஜார்கண்டில் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளிலும், வயநாடு இடைத்தேர்தல் நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Election 2024

டெல்லி : முன்னதாக ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்களை அடுத்து, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திற்க்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநில தேர்தல் விவரங்கள் :

  • மொத்த தொகுதிகள் : 81.
  • மொத்த வாக்காளர்கள் –  2.6 கோடி.

முதற்கட்ட தேர்தல் (43 தொகுதிகள்) : 

வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 18.10.2024.

வேட்புமனு நிறைவு – 25.10.2023.

வேட்புமனு வாபஸ் –  30.10.2024.

வாக்குப்பதிவு நாள் : 13.11.2024. 

இரண்டாம் கட்ட தேர்தல் (38 தொகுதிகள்) : 

வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 22.10.2024.

வேட்புமனு நிறைவு – 29.10.2023.

வேட்புமனு வாபஸ் –  04.11.2024.

வாக்குப்பதிவு நாள் : 20.11.2024. 

மகாராஷ்டிரா மாநில தேர்தல் விவரங்கள் :

  • மொத்த தொகுதிகள் : 288.
  • மொத்த வாக்காளர்கள் –  9.63 கோடி.

வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 22.10.2024.

வேட்புமனு நிறைவு – 29.10.2023.

வேட்புமனு வாபஸ் –  30.10.2024.

வாக்குப்பதிவு நாள் : 20.11.2024. 

வயநாடு மக்களவை இடைத்தேர்தல் :

வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 18.10.2024.

வேட்புமனு நிறைவு – 25.10.2023.

வேட்புமனு வாபஸ் –  30.10.2024.

வாக்குப்பதிவு நாள் : 13.11.2024.

மகாராஷ்டிரா, ஜார்கண்ட், வயநாடு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் – நவம்பர் 23, 2024.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்