தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்.!
தமிழகம், புதுவை, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 15) தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனிடையே, வடகிழக்கு பருவமழை இன்றோ நாளையோ தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, தமிழகம், புதுவை, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே, மழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது, பருவமழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில், இனிமேல் தான் மழைக்கான ஆட்டமே ஆரம்பம் போல் தெரிகிறது.
அதேநேரம், இந்த முறை வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக இருப்பதால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 15, 2024