அறுந்து விழுந்த மின் வயர்…சென்னை மக்களே உஷார்!
டி நகர் நடேசன் தெருவில் மின் கம்பி அறிந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை : மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் நீர் தேங்கி குளம் போலக் காட்சியளிக்கிறது. எனவே, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
ஒரு பக்கம் இது சம்பந்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் மக்களாகிய நாம் சில இடங்களில் பார்த்துப் பாதுகாப்பாகச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், மழைக்காலம் தொடங்கிவிட்டது என்றாலே அடிக்கும் காற்றுக்கு மின்கம்பங்கள் சரிந்து தண்ணீருக்குள் விழுவது உண்டு.
அப்படி தான், சென்னை மாவட்டத்தில் தி நகர்ப் பகுதியில் நடேசன் தெருவில் உள்ள கடை ஒன்றில் வயர் ஒன்று அறுந்து விழுந்து பட்டாசு போல் வெடித்துக்கொண்டு இருக்கிறது. தண்ணீரைத் தேங்கிக் கிடைப்பதால் , மின் வயர் அறுந்து விழுந்ததை கவனிக்காமல் அந்த பகுதியில் மக்கள் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
விரைவில் தமிழக அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு அந்த பகுதியில் சீரமைப்பு பணியைச் சரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின் வயர் அறுந்து கீழே விழுந்தது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
Current Wire ???????? #ChennaiRains
????Chennai , T Nagar – Natesan Street pic.twitter.com/eGr0xa0lKR
— Let’s X OTT GLOBAL (@LetsXOtt) October 15, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025