“பேரிடர்களை எதிர்கொள்ள முன்கள வீரனாக நிற்பேன்.!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் பணியாற்றும் ஊழியர்களுடன் நானும் துணை நிற்பேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Tamilnadu CM MK Stalin inspect Rain Precaution

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால் இன்று காலை முதலே சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் மழைநீர் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள், மீட்பு பணிகள் குறித்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபாட்டுள்ள தூய்மை பணியாளர்களுடன் ஒன்றாக டீ அருந்தினார் . அதன் பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ” கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் , நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்! அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன். ” எனப் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்