மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி…!ஆட்சியை பிடிக்கும் …! மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்த்தித்த பின்னர் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினேன். முதலமைச்சர் பழனிசாமிக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்தேன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவு எடுப்பார்.மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.