IND vs NZ : முதல் டெஸ்ட் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு! இந்தியா அணிக்கு தொடரும் சிக்கல்?

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நாளை நடைபெறுகிறது.

Indian Test Team

பெங்களூரு : நியூஸிலாந்து அணி வரும் அக்டோபர்-16 ம் தேதி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில், 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் மோதவுள்ளன. இந்த டெஸ்ட் போட்டிக்கான இரண்டு அணிகளையும் அந்தந்த கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது பெங்களூரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வைத்து நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் போட்டி நடைபெறும் அன்று அதாவது நாளை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, போட்டியின் முதல் இரண்டு நாட்களில் 41% சதவீத மழை பெய்ய வாய்ப்பும், 3-ஆம் நாளில் 67% சதவீத மழை பெய்ய வாய்ப்பும் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இந்த போட்டியானது தாமதமாகத் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில், கான்பூரில் நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரின் 2-ஆம் போட்டி கூட இப்படி மழையால் பாதிக்கப்பட்டது. அதன்பின், 4-ஆம் நாளில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பி போட்டியானது நடைபெற்றது. அதே போல இந்த போட்டியும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்கு ஏற்படும் சிக்கல் என்ன ?

இந்திய அணி இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலிருந்து வருகின்றனர். இந்த 3 போட்டிகள் எந்த வித தடையுமின்றி நடந்து அதில் இந்திய அணி வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட முடியும்.

இதனால், ஏற்கனவே இந்திய அணி 2 போட்டிகள் (வங்கதேச தொடர்) வெற்றிப் பெற்றுவிட்டது. மேலும், 3 வெற்றிகள் இந்திய அணிக்குத் தேவைப்படுகிறது. இந்த நிலையில், மழையால் போட்டி நடைபெறாமல் போனால் அது இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்து விடும்.

மேலும், அடுத்த மாதத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளதால். அது மிக சவாலாக இந்திய அணிக்கு அமையும், அதனால் தான் கிடைக்கின்ற இது போன்ற தொடரைக் கைப்பற்ற வேண்டும் என இந்திய அணி முற்படுகிறது. இதனால், நாளை நடைபெறும் போட்டியில் மழை பொலிவு இருக்கக் கூடாது என இந்திய அணி உட்பட இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்