பவுலர்களை மதிக்கவே இல்லை… அதுதான் அவர் பேட்டிங் – பாண்டியாவை புகழ்ந்த ஆகாஷ் சோப்ரா!

வங்கதேச அணியுடனான தொடரில் இந்திய அணியின் வீரரான ஹர்திக் பாண்டியா வித்தியாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Hardik Pandya - Akash Chopra

சென்னை : நடைபெற்று முடிந்த வங்கதேச அணியுடனான டி20 தொடரில் இந்திய அணி 3-0 என அந்த தொடரை கைப்பற்றி அசத்தி இருந்தது. இந்த தொடரில் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா திறம்பட விளையாடி இருந்தார். அவர், இந்த தொடரில் மட்டும் 222.64 ஸ் ஸ்ட்ரைக் ரேட்டுடன் 118 ரன்கள் குவித்து, தொடரின் 2-வது அதிக ரன் ஸ்கோரராக மாறி இருக்கிறார்.

மேலும், பந்து வீச்சிலும் அதிக அளவு ரன்கள் கொடுக்காமல் 1 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். இதனையும் தாண்டி அவரது சிறப்பான ஃபீல்டிங்காலும் அனைவரும் கவனிக்கும்படி செய்துள்ளார். இதே ஹர்திக் பாண்டியவை இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது அவரது ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வந்தனர்.

ஆனால், டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அவரது சிறப்பான விளையாட்டு மிகமுக்கியமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு, அவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு சில இன்னல்களை சந்தித்தார்.

அதன்பின் அதிலிருந்து மீண்டு வந்து தற்போது கலக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில், இந்தத் தொடரில் பாண்டியா விலயடையதை பற்றி இந்தியா அணியின் முன்னால் வீரரான ஆகாஷ் சோப்ரா அவரது யூடியூப் சேனலில் பேசி இருந்தார். இது குறித்து அவர் பேசுகையில், “இந்தத் தொடரின் சிறந்த வீரராக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுகிறார்.

அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில் ரீதியாகவும் சரி பல இன்னல்களை எதிர்கொண்டார்.  அவரது ரசிகர்களா லே கேலி செய்யப்பட்டார். நடைபெற்ற, மூன்று போட்டிகளிலும் அவர் பேட்டிங் செய்தார். அவர் சில பந்துகளை மட்டுமே இந்த தொடரில் விளையாடியுள்ளார். ஆனால், 200 க்கு மேல் அவரது ஸ்ட்ரைக் ரேட் இருக்கின்றது. அவர் முற்றிலும் மாறுபட்டவர்”, எனக் கூறி இருந்தார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், “அவரது பேட்டிங் வித்தியாசமானது. அவர், ஓவர் கவரில் ஒரு சிக்ஸர், லெக் சைட்டில் பார்க்காமலே ஒரு கை சிக்ஸர் என வித்தியாசமாக பேட்டிங் செய்கிறார். இது கிட்டத்தட்ட பந்து வீச்சாளர்களை அவமதிப்பது போன்றது. அவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை என்பது போல அவரது பேட்டிங் இருந்தது”, என ஆகாஷ் சோப்ரா கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்