IND vs NZ : நியூஸிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! பும்ராவை தேடி வந்த பதவி!

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வருகிற அக்-16 ம் தேதி முதல் இந்திய அணியுடன் 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

Indian Squad for NZ

பெங்களூரு : இந்திய அணி தற்போது வங்கதேச அணியுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக வரும் அக்-16 ம் தேதி முதல் நியூஸிலாந்து அணியுடன் 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதில் முதல் போட்டியனது பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான நியூஸிலாந்து அணியை சமீபத்தில் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. அப்போது முதல் இந்திய அணியின் ரசிகர்களும் இந்த தொடருக்கான இந்திய அணியை குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்தனர்.

அதன்படி, நேற்று பிசிசிஐ ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை அறிவித்தனர். சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற அணி அப்படியே இந்த நியூஸிலாந்து தொடரிலும் களமிறங்குகிறது.

துணை கேப்டன் பும்ரா :

மேலும், இந்த அணியில் மேற்கொண்டு 4 ரிசர்வ் வீரர்களையும் பிசிசிஐ இணைத்துள்ளது. அதில், மாயங்க் யாதவ், ஹர்ஷித் ராணா, ப்ரஷீத் கிருஷ்ணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி  ஆகியோர் தான் அந்த 4 ரிசர்வ் வீரர்கள். அதே போல இந்த டெஸ்ட் தொடருக்கான துணை கேப்டன் பொறுப்பு வேக பந்து வீச்சாளர் பும்ராவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை ரோஹித் சர்மா காயம் அல்லது வேறு காரணங்களுக்காக இந்த தொடரிலிருந்து விலகினால் இந்த தொடரில் இந்திய அணியை பும்ரா தலைமை தாங்குவார். மேலும், பும்ரா தலைமையில் ஏற்கனவே இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ அறிவித்த இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

ரிசர்வ் வீரர்கள் :

ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்