நவராத்திரி 2024-விஜய தசமி உணர்த்தும் தத்துவங்கள்..!

அம்பிகை மகிஷா சூரனை அழிக்க எடுத்துக்கொண்ட காலத்தை தான் நாம் நவராத்திரி பண்டிகையாக கொண்டாடுகிறோம். விஜயதசமி அக்டோபர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

vijayadasami (1)

அம்பிகை மகிஷா சூரனை அழிக்க எடுத்துக்கொண்ட காலத்தை தான் நாம் நவராத்திரி பண்டிகையாக கொண்டாடுகிறோம்.

சென்னை –நவராத்திரி விழாவின்  ஒன்பது நாட்கள் கொலு வைத்து பலரது வீடுகளிலும் விழா கோலமாக காட்சியளிக்கும் .ஆனால் கொலு வைத்தவர்கள் மற்றும் கொலு  வைக்காதவர்கள் என அனைவரும் கொண்டாடுவது சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை  தான். விஜயதசமி அக்டோபர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

விஜயதசமி உணர்த்தும் தத்துவங்கள்;

கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக திகழ்வது மைசூர் தான். இங்கிருந்து தான் விஜயதசமியின் வரலாறு ஆரம்பமானது என கூறப்படுகிறது . மகிஷாசூர் என்ற பெயர் தான் மருவி தற்போது மைசூராக   மாறியுள்ளதாக  கூறப்படுகிறது . மகிஷாசுரன் என்று அரைக்கண் மைசூரில் தான் வாழ்ந்து வந்தார் என தேவி புராணம் குறிப்பிடுகிறது. அதனால் தான் மைசூரில் மிகவும் பிரமாண்டமாக தசரா கொண்டாடப்படுகிறது.

மகிஷாசுரனை அழிக்க அம்பிகை ஒன்பது வடிவங்கள் எடுத்து ஒன்பதாவது நாள் வதம் செய்துள்ளார் என புராணங்கள் கூறுகின்றது. இதன் வெற்றியான விஜயத்தை  தான் தசமியான பத்தாம் நாளில் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக பெண் என்றால் பலவீனமானவள் மற்றும் உணர்ச்சிமயமானவள் என்ற கருத்து உள்ளது. ஆனால் அந்தப் பெண் நினைத்தால் அறிவும், செல்வமும் ,சக்தியும் திரண்ட வடிவமாக மாறலாம்.

மேலும் தன் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் போது சரஸ்வதி ஆகவும், சம்பாதிக்கும் போது லட்சுமி ஆகவும், சிறுமையை கண்டால் சக்தியாகவும் மாறுகிறாள். இவ்வனைத்துக்கும் ஆயுதமாக இருக்கும் அறிவு, ஆளுமை ,ஆற்றல் போன்றவற்றை தனது சூழ்நிலையில் இருந்தும் தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களிடமிருந்தும் சேகரித்துக் கொள்கிறாள். மொத்தத்தில் பெண்மையின் முழுமையான வெற்றியே விஜயதசமி நாளாகும் .

இந்த விஜயதசமி நாளில் சிறு குழந்தைகளை கல்வி கற்க தொடங்குவது, வித்தியாரம்பம்  செய்வது, கலை தொடர்பான செயல்களில் ஈடுபடுவது போன்ற படிப்பு மற்றும் கலை சார்ந்த செயல்களை செய்ய துவங்க சிறந்த நாளாக கூறப்படுகிறது. மேலும் இந்த நாளில் துவங்கும் அனைத்து செயல்களும் வெற்றி தரும் என்பது ஐதீகமாகவும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்