ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரத்தன் டாடா இதுவரை மொத்தமாக 9,000 கோடி வரை நன்கொடை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ratan tata net worth

மும்பை : மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உயிரோடு இருந்த சமயத்தில் சம்பாதித்த பணங்களை பல நல்ல விஷயங்களுக்குக் கொடுத்து உதவி செய்து இருக்கிறார். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த ரத்தன் டாடா சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

எனவே, அவருடைய வீட்டின் விலை மதிப்பு என்ன அவர் வைத்து இருக்கும் கார்கள் என்னவெல்லாம் என்பது பற்றியும் அவருடைய சொத்து மதிப்பு பற்றியும் இந்த பதிவில் விவரமாகப் பார்க்கலாம்.

சம்பளம் ?

டாடா குடும்பத்தால் தொடங்கப்பட்ட நேஷனல் ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமை ரத்தன் டாடாவை தான் சேரும். அந்த சமயம் இவர் ஒரு ஆண்டுக்கு 2.5 கோடி சம்பளம் வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. தொழிற்துறையில் ராஜாவாக இருந்த ரத்தன் டாடா மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 3,800 கோடி ரூபாய் இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட வீடு

ரத்தன் டாடா சொத்துக்களில் மிகவும் பிரமாண்டமாகப் பார்க்கப்படுவது என்றால் அவருடைய வீட்டைப் பற்றி தான்.மும்பையில் உள்ள கொலாபாவில் அவருடைய விடு அமைந்திருக்கிறது. 13,350 சதுர அடி பரப்பளவில் மூன்று மாடிக் கட்டிடமாகப் பார்ப்பதற்குப் பிரமாண்டமாக அமைந்துள்ள அந்த வீட்டில் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், மினி தியேட்டர் என்ற அனைத்து வசதிகளும் உள்ளது. இந்த வீட்டினுடைய விலை ரூ.150 கோடி இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கார்கள்

ரத்தன் டாடா அதிகமாக கார் வாங்குவதில் விரும்பும் காமிக்கும் ஒருவர். எனவே அவர் Ferrari California, Cadillac XLR, Mercedes-Benz, Jaguar Land Rover and Tata Vehicles, Tata Nano, Maserati Quattroporte, Honda Civic, உள்ளிட்ட கார்களை வைத்துள்ளார்.

நன்கொடை

ரத்தன் டாடா பொறுத்தவரையில் சம்பாதிக்கும் பணத்தை உதவி செய்யவேண்டும் என நினைக்கக் கூடிய நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனிதர். எனவே, டாடா சன்ஸ் நிறுவனத்திற்குக் கிடைக்கும் லாபத்தில் 66% தொண்டு அறக்கட்டளைகளுக்குச் செலுத்தி வருகிறார். இதுவரை, மொத்தமாக 9,000 கோடி வரை நன்கொடை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரத்தன் டாட்டா செய்த நன்கொடையை பார்க்கும் போது மக்களுக்காகவே உழைத்த அவரது மனிதநேயமிக்க குணத்தை மட்டும் தான் பார்க்க முடிகிறது. அவர் ஒரு 20% முதல் 40% சதவீதம் வரையில் மக்க்ளுக்காக நன்கொடை செய்திருந்தால் கூட தொழிலதிபர் பட்டியலில் தன்னை நிலை நிறுத்தி இருப்பார். ஆனால், அவருக்கு அதனைக் குறித்த எந்த ஒரு கவலையும் இல்லை, அவருடைய நோக்கம் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பது தான் என இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்