கிரிக்கெட் வரலாற்றில் புதிய ‘மைல்கல்’! ஜோ ரூட் படைத்த அசாத்திய சாதனை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இங்கிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

Joe Root Record Break

முல்தான் : இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியானது முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 27 ரன்கள் எடுத்த போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற அசாத்திய சாதனையை ஜோ ரூட் படைத்தார். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

அதன்படி, முதல் இன்னிங்ஸ்க்கு சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி 149 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 556 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷஃபீக் 102 ரன்களும், ஷான் மசூத் 151 ரன்களும், ஆகா சல்மான் 104 ரன்களும் எடுத்திருந்தனர்.

அதன் பிறகு இங்கிலாந்து அணி, தங்களது முதல் இன்ன்னிக்ஸ்க்கு பேட்டிங் செய்ய களமிறங்கியது. அப்போது, முதல் விக்கெட்டை இங்கிலாந்து அணி விரைவில் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய ஜோ ரூட், அவரது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதில், அவர் 27 ரன்களைக் கடந்த போது உலக சாம்பியன்ஷிப் தொடரில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையைப் படைத்தார் ஜோ ரூட். ஜோ ரூட், நடைபெற்று வரும் இந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 5133 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

மேலும், அவரைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரரான லபுஷேன் 3094 ரன்கள் எடுத்து 2-ஆம் இடத்திலும், 3086 ரன்கள் எடுத்து 3-ஆம் இடத்திலும் இருந்து வருகின்றனர். சாதனைப் படைத்த ஜோ ரூட்டிற்கு கிரிக்கெட் வட்டாரங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்