இட்லி தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சட்னியா ?அப்போ இந்த சட்னிய ட்ரை பண்ணுங்க..
வித்தியாசமான சுவையில் கத்தரிக்காய் தக்காளி காரச் சட்னி செய்வது எப்படி என இந்த செய்து குறிப்பில் காணலாம்.
சென்னை –வித்தியாசமான சுவையில் கத்தரிக்காய் தக்காளி காரச் சட்னி செய்வது எப்படி என இந்த செய்து குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- வெங்காயம் =இரண்டு
- பச்சை மிளகாய்= இரண்டு
- கத்திரிக்காய்= கால் கிலோ
- பூண்டு =5 பள்ளு
- தக்காளி =3
- கொத்தமல்லி இலை= ஒரு கைப்பிடி
- மல்லித்தூள்= அரை ஸ்பூன்
- மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
- எண்ணெய் =5 ஸ்பூன்
- புளி =1 இன்ச் அளவு
செய்முறை;
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு ,பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கி கொள்ளவும். பிறகு தக்காளியையும் சேர்த்து நன்கு மசியும் அளவுக்கு வதக்கிக் கொண்டு கத்தரிக்காய் நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். கத்தரிக்காய் வெந்த பிறகு மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆற வைத்து தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு தாளிப்பு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறிவிட்டு இறக்கினால் காரசாரமான கத்தரிக்காய் தக்காளி சட்னி ரெடியாகிவிடும்.