எகிறும் பெட்ரோல் விலை …!பெட்ரோல் விலை ஏற்றம் என்பது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது…!தினகரன் அணியின் தங்கத்தமிழ்செல்வன் ஆவேசம்
பெட்ரோல் விலை ஏற்றம் என்பது மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத ஓன்று என்று அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பெட்ரோல் விலை ஏற்றம் என்பது மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத ஓன்று ஆகும்.ஒவ்வொரு நாளும் 50 காசு,1ரூ விலை ஏற்றம் ஏற்புடையதல்ல.மோடிஅரசு ஒரே பொருள் ஒரே வரி என்றது. ஏன் பெட்ரோல் டீசலுக்கு மற்றும் அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளது . அதையும் ஜி.எஸ்.டி யில் கொண்டுவரவேண்டியது தானே என்றும் தங்கத்தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.