2024-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

"கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக" டேவிட் பேக்கருக்கும், "புரத அமைப்பு கணிப்புக்காக" டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Prize in Chemistry

ஸ்டாக்ஹோம் : இந்த ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், முதல் பாதியை அமெரிக்காவின் டேவிட் பேக்கருக்கும், இரண்டாவது பாதியை டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்ப்பர் ஆகியோருக்கு வழங்கியும் நோபல் அகாடமி முடிவு செய்துள்ளது.

அதில், “கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக” டேவிட் பேக்கருக்கும், “புரத அமைப்பு கணிப்புக்காக” டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் என மூவருக்கும் இந்த முறை வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இதே போல ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அதில், இந்த ஆண்டு அதாவது 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசை அக்-7 முதல் அறிவித்து வருகின்றனர். இந்த நோபல் அக்-14 வரையில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதன்படி, முன்னதாக 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருக்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

பின் அதைத் தொடர்ந்து நேற்றும் இதே போல இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜியோஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேதியியலுக்கான நோபல் பரிசையும் அறிவித்துள்ளது நோபல் அகாடமி.

மேலும், நாளை (வியாழக் கிழமை) அன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அமைதிக்கான நோபல் பரிசும், அக்டோபர் 14ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்