WWT20 : நியூஸிலாந்து அணியின் படுதோல்வி இந்திய அணிக்கு லாபமா? புள்ளிப்பட்டியலின் நிலை என்ன?
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் நியூசிலாந்து அணி புள்ளி விவர பட்டியலில் இந்திய அணியை விட மேல் இடத்தில் இருக்கிறது.
துபாய் : மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். நேற்று நடைபெற்ற 10-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியும் மோதியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி நியூசிலாந்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. அதே சமயம், நியூசிலாந்து அணி கடுமையான தோல்வியைச் சந்தித்ததன் காரணமாகப் புள்ளி விவரப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
இரண்டு போட்டிகளில் 2 புள்ளிகள் இருந்தபோதிலும், நியூசிலாந்து அணி புள்ளி விவர பட்டியலில் இந்தியாவை விட மேல் இடத்தில் தான் இருக்கிறது. அதற்குக் காரணமே,நியூசிலாந்து அணி நல்ல நிகர ரன் ரேட் வைத்திருக்கிறது. எனவே, இதன் காரணமாகத் தான் புள்ளி விவரப் பட்டியலில் 3 -வது படத்தில் இருக்கிறது. 4-வது இடத்தில் இந்திய அணி இருக்கிறது.
எனவே, இதுபோன்ற சூழ்நிலையில், புள்ளி விவரப் பட்டியலில் முன்னுக்கு வருவதற்கு இந்திய அணிக்கு இன்று அக்டோபர் 9- ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமான போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இதில் அந்த அணி இலங்கையை அபாரமான வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
அப்படி அதிகமான விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டும் தான் இலங்கை அணியை விட அதிகமான புள்ளி விவரம் பெற்று புள்ளி விவரப் பட்டியலில் நியூசிலாந்தை அணியை பின்னுக்குத் தள்ளி முன் செல்ல முடியும். எனவே, இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி கட்டாயமாக வெற்றியைப் பதிவு செய்யவேண்டும் என்ற கட்டத்தில் உள்ளது.